ஹம்சாவே எதிர்க்கட்சித் தலைவர்! - சபாநாயகர் அறிவிப்பு
- Shan Siva
- 25 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 25: மக்களவைக்கு மாற்றம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் கிடைக்காததால், ஹம்சா ஜைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வார் என்று சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை, எனவே தற்போதைய நிலை அப்படியே உள்ளது. அது எதுவாக இருந்தாலும் காத்திருக்கிறோம் என்று ஹம்சாவின் எதிர்க்கட்சித் தலைவர் நிலை குறித்து கேட்டபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பெரிகாத்தான் நேஷனல் உறுப்புக் கட்சிகள் பாஸ் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க ஒப்புக்கொண்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து ஹம்சாவின் நிலைப்பாடு குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சபாநாயகர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இருப்பினும், பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் பின்னர் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த விஷயத்தில் ஆலோசிக்க கட்சிக்கு நேரம் தேவை என்றும் கூறினார்.
கட்சித் தலைவர் முகைதீன் யாசினுடனான தலைமை மோதலின் போது பிப்ரவரி 13 அன்று பெர்சாத்துவிலிருந்த் ஹம்சா வெளியேற்றப்பட்டதிலிருந்து அவரது நிலைப்பாடு இழுபறியில் உள்ளது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



