ஹம்சாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்! – பெர்சாத்துவில் எதிர்ப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 6: பெர்சாத்து சிலாங்கூர் துணைத் தலைவர் ராஃபிக் அப்துல்லா, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள  குழப்பங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறி, ஹம்சா சைனுடின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது அவர்மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைவர் முகைதீன் யாசினைப் பலவீனப்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட இயக்கத்தில் ஹம்சா ஈடுபட்டதாகக் கூறி, பல கட்சி உறுப்பினர்கள் பெர்சாத்து ஒழுக்காற்றுக் குழுவுக்கு புகார்கள் அளித்துள்ளதாக ராஃபிக் தெரிவித்தார்.

தலைவரை பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றன. இதனால் நாங்கள் சோர்ந்து போயுள்ளோம். கட்சியின் ஒற்றுமையும், அதன் அரசியல் போராட்டமும் காக்கப்பட வேண்டும் என்றால், பெர்சாத்து ஒழுக்காற்றுக் குழு மூலமாக கட்சி இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் FMT-க்கு தெரிவித்தார். மேலும், லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இதற்கு முன்னர், முகைதீன் யாசினுடன் தமக்கு கருத்து வேறுபாடு இல்லை என்றும், கட்சிக்குள் இரண்டு அணிகள் இருப்பதாக கூறப்படுவது பொய்யானது என்றும் ஹம்சா மறுத்திருந்தார். பெர்சாத்து மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்தவே இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், கட்சிக்குள் பிளவை ஆதரிக்கும் முயற்சிகளுடன் ஹம்சாவின் பெயர் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருவடு குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *