ஹம்சாவின் ராஜினாமா ஒரு சிறந்த நடவடிக்கை! – வான் அஹ்மத் ஃபைசால்
- Shan Siva
- 15 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 15: பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தாரை, கட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஹம்சா ஜைனுதீன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஒரு சிறந்த நடவடிக்கை என்று பெர்சத்து கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான வான் அஹ்மத் ஃபைசல் வான் அஹ்மத் கமால் தெரிவித்துள்ளார்.
சம்சுரியின் நம்பகத்தன்மையை
மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தி, அவரை பலவீனமானவராக சித்தரிப்பதன் மூலம் தனது முன்னாள் கட்சி தரக்குறைவான
அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம்
சாட்டினார்.
ஹம்ஸா தனக்கு
அளிக்கப்பட்ட பணியைப் புரிந்துகொண்டார். பதவி விலகுவதன் மூலம், சம்சூரி மீதான தாக்குதல்களைத் தடுக்க அவர்
உதவுகிறார்.
மேலும், சம்சூரி தங்களின் அடையாள நாயகன் என்பதால், தாங்கள்அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
புத்தாண்டு தொடக்கத்தில்
பெர்லிஸ் அரசியல் நெருக்கடிக்கு வித்திட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து,
கடந்த சில மாதங்களாக PAS மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கு இடையிலான
உறவுகள் மோசமடைந்துள்ளன.
திரெங்கானு மந்திரி
பெசாரான சம்சூரி, PN கூட்டணியில்
பெர்சாத்துவின் கூட்டாளியான PAS கட்சியின் உதவித் தலைவர்
ஆவார்.
ஜனவரி 1 அன்று ராஜினாமா செய்த பெர்சாத்துவின் தலைவர்
முகைதீன் யாசினுக்குப் பதிலாக,
பிப்ரவரியில் அவர் கூட்டணியின் தலைவராக
நியமிக்கப்பட்டார்.
காலியாக உள்ள
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து PN கட்சி, சபாநாயகரிடம்
முறைப்படியான அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் என்று சம்சூரி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
ஹம்சா பதவி விலகியதாக
வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, இதுகுறித்து கருத்து
தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் ஹம்சா பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் இல்லை,
ஆனால் பி.என். கூட்டணியில் ஒற்றுமையைப்
பாதுகாக்க உதவுவதற்காக அவர் விலகினார். அவர் தனது சொந்த நலனை விட கூட்டணியின் நலனுக்கு
முன்னுரிமை அளித்தார் என்று மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அஹ்மத் ஃபைசல்
வான் அஹ்மத் கமால் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



