ஒரு துணையமைச்சர் இப்படிப் பேசலாமா? - உரிமை கட்சி குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5: இந்து அறநிலைய வாரியங்கள் மாநில மட்டத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தேசிய ஒற்றுமைத்துறை துணைஅமைச்சர் R Yuneswaran கூறிய கருத்து அரசியல் சட்டத்திற்கு முரணானது என உரிமை கட்சியின் செயலாளர் Satees Muniandy குற்றம் சாட்டினார்.

இந்து அறநிலையங்கள் (Hindu endowments) மலேசிய கூட்டரசு அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் உள்ள கூட்டரசு பட்டியல் (Federal List) கீழ் வருகின்றன. Federal List-இன் Item 15(c) தெளிவாக இந்து அறநிலையங்கள் கூட்டாட்சி அரசின் கீழ் வருவதாகக் குறிப்பிடுகிறது. அரசியல் சட்டத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது.

ஆனால்தவறான அரசியல் சட்ட தகவலை Dewan Negara-வில் ஒரு துணை அமைச்சர் வழங்குவது மிகுந்த கவலைக்குரியது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Federal List-இன் Item 15(c) படி, தர்மநிலையங்கள், தர்ம நிதிகள், தர்ம அறக்கட்டளைகள் (wakaf தவிர) மற்றும் இந்து அறநிலையங்கள் அனைத்தும் புத்ராஜெயாவின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்,

இதற்கு முன் யுனேஸ்வரன், மதச் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்பதாவது அட்டவணையின் மாநில பட்டியல் (State List) கீழ் மாநிலங்களின் அதிகார வரம்பில் உள்ளன எனக் கூறியிருந்தார். அதனால், இந்து அறநிலைய வாரியங்கள் மாநில மட்டத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கமளித்தார்.

மேலும், பினாங்கில் அமல்படுத்தப்பட்டதுபோல் மாநிலங்கள் தங்களது சொந்த இந்து அறநிலைய வாரியங்களை அமைக்க அமைச்சகம் முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *