வான் சைஃபுலின் செயல் கட்சியைப் பிளவுபடுத்தும்! அஸ்மின் அலி விளக்கம்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், அக்1: தாம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 2019 வீடியோ தொடர்பாக பெர்சாத்துவின் உச்ச மன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் கூறியிருக்கும் புதிய குற்றச்சாட்டுகளை பெர்சாத்துவின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி நிராகரித்தார்.

வான் சைஃபுல் கூறிய கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், மற்றும் அறிவை நம்பத் தவறிய செயல் என்று அஸ்மின் குறிப்பிட்டார். இது கட்சியை மேலும் பிளவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் அவதூறு கலாச்சாரத்தை பிரதிபலிப்பதையும் காட்டுகிறது என்று அஸ்மின் கூறியதாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

அவர்கள் அவதூறுகளில் வாழ்கிறார்கள். நாங்கள் உண்மைகள் மற்றும் அறிவை நம்பியிருக்கிறோம். அமைதியாக, நாங்கள் முன்னேறுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு போராட்டத்திற்கும் அதன் சொந்த சவால்கள் உள்ளன. நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் சேவை செய்கிறோம் என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின், பாஸ் உடனான தனது உறவுகள் குறித்த ஊகங்களையும் நிராகரித்தார். சிலாங்கூரில் உள்ள பாஸ் கட்சியுடனும் தேசிய அளவிலும் உறவுகள் வலுவாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

2019 வீடியோவைச் சுற்றியுள்ள சர்ச்சை தீர்க்கப்படாத வரை அஸ்மின் பெர்சாத்துவை வழிநடத்த தகுதியற்றவர் என்று வான் சைஃபுல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

வீடியோ உண்மையானது என்பதைக் குறிக்கும் "புதிய தகவல்" தனக்குக் கிடைத்ததாக சைஃபுல் கூறினார். இதனால் தாம் முன்பு அஸ்மினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக இருந்தபோதிலும், அவரது ஆதரவை மாற்றியதாகத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *