கத்திக் குத்து காயங்களுடன் ஆண் - பெண் சடலம்! யான் அருகே பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், செப் 12: யான் அருகே உள்ள குவார் செம்பெடாக்   தாமான் நோனாவில் நேற்று இரவு 30 வயது ஆணும் 28 வயது பெண்ணும் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரவு 9.40 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக யான் காவல்துறைத் தலைவர் ஹமிசி அப்துல்லா தெரிவித்தார்.

அவர்கள் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் வீராவின் முன் பயணிகள் இருக்கையில் அந்தப் பெண் இறந்து கிடந்தார், அதே நேரத்தில் அந்த நபர் சாலையில் முகம் குப்புறக் கிடந்தார்ன்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான உறவை தீர்மானிக்கவும் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *