தாயாருக்குத் தீக்காயம் ஏற்படும் அளவுக்கு வீட்டை எரித்த ஆடவன் கைது!
- Muthu Kumar
- 31 Oct, 2025
Lஈப்போ, அக்.31-
பெங்காலான் உலு, கம்போங் செபெராங் குவாக் உலுவிலுள்ள தன் குடும்ப வீட்டை எரித்த ஓர் ஆடவனை போலீசார் கைது செய்தனர்.கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 25 வயதுடைய ஆடவன் அவ்வீட்டை எரித்ததில் 65 விழுக்காடு வரை சேதம் ஏற்பட்டதாக பெங்காலான் உலு மாவட்ட போலிஸ் தலைவர் எஸ்பி ஸுல்கிப்ளி இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த இடத்தில் 1 வீடு தீப்பற்றியது சம்பந்தப்பட்ட புகார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறை பின்னிரவு 1.08 மணிக்குப் பெற்றது. தொடக்கக்கட்ட விசாரணைப்படி போதைப்பொருள் தாக்கத்தில் இருந்ததாக நம்பப்படும் வீட்டு உரிமையாளரின் மகன் செய்த துரோகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் காயமுற்றதாக நம்பப்படும் அவனது தாயார் மேல் சிகிச்சை மற்றும் உடனடி அறுவை சிகிச்சைக்காக கெடா, அலோர்ஸ்டாரிலுள்ள கல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெங்காலான் உலு தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள், பாலிங் மாவட்ட தீயணைப்பாளர்களின் உதவியுடன் பின்னிரவு 2.30 மணிக்கு தீயை அணைத்து விட்டனர்.
அதே நாளில் அதிகாலை 3.25 மணிக்கு மாவட்ட போலீஸ் தலைமையகக் குற்றப் புலனாய்வுத் துறையின் உளவு மற்றும் நடவடிக்கைப் பிரிவு போலீஸ் மற்றும் அதிகாரிகள் குழு, ரோந்து கார் பிரிவு போலீசும் இணைந்து ஆடவனைக் கைது செய்து விட்டனர்.
கெரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவு கோரப்பட்டதில் அந்த ஆடவன் நாளை வரை தடுப்பில் வைக்கப்படுவான். அவனிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தபெத்தமின் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் 436ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் எஸ்பி ஸுல்கிப்ளி இப்ராஹிம் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



