அரண்மனை கேட் பகுதியில் குடிபோதையில் வாகனத்தை மோதிய நபர் கைது!
- Shan Siva
- 23 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 23: ஜாலான் சங்காட் செமந்தன் வழியாக
இஸ்தானா நெகாராவின் கேட் 2 இல் இன்று அதிகாலை ஒரு
கார் பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதில் ஒருவர்
கைது செய்யப்பட்டார்.
அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் புக்கிட்
டாமன்சாராவிலிருந்து பயணித்த 21 வயது மலேசிய நபர்
ஓட்டிச் சென்ற டொயோட்டா வியோஸ் சம்பந்தப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை
மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஜம்சுரி இசா தெரிவித்தார்.
ஓட்டுநருக்கோ அல்லது வேறு
எந்த தரப்பினருக்கோ எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் வாகனத்தின்
முன்பக்கம், கம்பம் மற்றும் தடுப்பு
வாயில் சேதமடைந்தன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகளை
மதிப்பாய்வு செய்தல், ஓட்டுநரின்
வாக்குமூலத்தைப் பதிவு செய்தல் மற்றும் மூச்சுப் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட
விசாரணைகளை போலீசார் சம்பவ இடத்தில் மேற்கொண்டதாக அவர் கூறினார்.
ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக
நம்பப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



