காஜாங் டோல் சாவடியில் காரை உதைத்த நபர் கைது!
- Shan Siva
- 28 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 28: : சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு காணொளியில் காணப்பட்டபடி, காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலையின் (லேகாஸ்) காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறை கைது செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சேதமடைந்த வாகனத்தின் 65 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, 24 வயதான அந்த சந்தேக நபர் காஜாங்கில் கைது செய்யப்பட்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நஸ்ரான் அப்துல் யூசோஃப் கூறினார்.
இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ், சேதப்படுத்துதல் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவின் கீழ், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவத்திற்கான காரணமும் நோக்கமும் இன்னும் விசாரணையில் உள்ளதாக நஸ்ரான் தெரிவித்தார்.
சாலைப் பயனாளர்கள் பிறர் மீது அக்கறையுடன் நடந்துகொள்ளவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் அவர் அறிவுறுத்தினார்.
86 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், சுங்கச்சாவடியில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஒரு காரை உதைத்தவாறே அதன் ஓட்டுநரைத் திட்டுவது தெரிகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



