தாய்லாந்தில் மலேசியரைக் கொன்ற நபர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 3: தாய்லாந்தின் சுங்கை கோலோக்கில் சனிக்கிழமை இரவு மலேசியர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளந்தான் கால்பந்து அணியின் முன்னாள் இறக்குமதி வீரரான சந்தேக நபர் சரணடைந்ததாக சுங்கை கோலோக் காவல் நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 சந்தேக நபர் நேற்று இரவு சுங்கை கோலோக் காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்று செய்தித் தொடர்பாளர் கூறியதாக உத்துசான் மலேசியாவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் சந்தேக நபர் ஒப்படைத்துள்ளார்.

இரட்டை குடியுரிமை பெற்றதாக நம்பப்படும் அந்த முன்னாள் வீரர், இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்று கிளந்தான் காவல் துறைத் தலைவர் யூசோப் மமாட் தெரிவித்தார்.

33 வயதான சம்பந்தப்பட்டவருக்கு 2020 முதல் நான்கு போதைப்பொருள் குற்றங்களின் வரலாறு இருப்பதாகவும், சனிக்கிழமை காலை எல்லைப் பாதையைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்ததாகவும் யூசோப் கூறினார்.

கிளந்தான், பாசிர் மாஸில் உள்ள கம்போங் கெபாஸ் அபாமைச் சேர்ந்த 33 வயதான ஃபுவாட் ஃபஹ்மி கசாலி, சனிக்கிழமை மாலை சுமார் 6.40 மணியளவில் மனைவியின் கண் முன்னாலேயே சுடப்பட்டார்.

பின்னர், சுங்கை கோலோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் இறந்தார்.

சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், இந்தத் தாக்குதல் கடன் தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது என்று நாரதிவாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *