கோவிலில் கலவரம் செய்த ஆடவர் கைது!

top-news
FREE WEBSITE AD

அம்பாங் ஜெயா, அக்.30-

கம்போங் பாரு அம்பாங், ஜாலான் மெர்டேக்காவிலுள்ள ஒரு கோவிலில் கலவரம் செய்த மது போதையில் இருந்த 1 ஆடவரை ரேலா படையினர் கைது செய்தனர்.

அப்பகுதியில் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த ரேலா உறுப்பினர்களிடமிருந்து இந்த புகார் பெறப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.கோவில் பகுதியிலுள்ள உணவகத்தில் கலவரம் நிகழ்ந்ததை அறிந்த புகார்தாரர் சென்று பார்த்ததில் மது போதையில் இருந்ததாக நம்பப்படும் ஓர் ஆடவரைக் கண்டார்.

வெளியேறும்படி அவனைக் கேட்டுக் கொண்டதில் சாம்பல் குவியலை சிதறடித்து அந்த இடத்தை ஆடவன் அசிங்கப்படுத்தினான். புகார் செய்த நபர் அவ்வாடவனை பிடித்து வைத்து போலீசைத் தொடர்பு கொண்டார்.சம்பந்தப்பட்ட 35 வயதுடைய ஆடவன் சம்பவ இடத்தில் அம்பாங் போலீஸ் நிலைய போலீஸ்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஓர் அறிக்கையில் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *