பச்சிளம் குழந்தைகள் - சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவற்றை வீடியோவாக விற்றவர் கைது!

top-news
FREE WEBSITE AD

 ஜொகூர் பாரு, ஆக 30: பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவற்றை வீடியோவாகப் பதிவு செய்து விற்றதாக சந்தேகிக்கப்படும் 29 வயது ஆண் ஒருவர், சிறுவர் பாலியல் குற்றவாளி குழுவின் மூளையாக இருப்பதாகக் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெலிகிராம் செய்தி செயலி மற்றும் டார்க் வலைதளம் மூலம் வீடியோக்களை விற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று சிறுமிகள் உட்பட பாதிக்கப்பட்டவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை சந்தேக நபர் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது, பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டினருக்கு சம்பந்தப்பட்ட வீடியோக்களை விற்றுள்ளான்.

சம்பந்தப்பட்ட அந்த சந்தேக நபர் தத்தெடுப்பதற்காக குழந்தைகளை வழங்கும் பேஸ்புக் இடுகைகளைத் தேடி குழந்தைகளைப் பெறுவான் என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் கூறினார்.

சந்தேக நபர்  RM1,500 முதல் RM3,500 வரை ரொக்கமாக வழங்குவான், மேலும் அவர்களின் மருத்துவமனை கட்டணங்களையும் செலுத்துவான் என்று அவர் ஞொகூர் காவல் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சந்தேக நபர் தனது பாதிக்கப்பட்டவர்களை தனது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகப் பாவிக்கும் படியாக சட்டப்பூர்வ பாதுகாப்பையும் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

சந்தேக நபர் தனது சுற்றுப்புறத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் மேற்பார்வையிடப்படாத குழந்தைகளை குறிவைத்து மற்ற பாதிக்கப்பட்டவர்களைத் தேடியதாக நம்பப்படுவதாகவும் குமார் கூறினார்.

இதுவரை, மூன்று பாதிக்கப்பட்டவர்களை (அவரது சுற்றுப்புறத்தைச் சேர்ந்த) ஐந்து முதல் ஏழு வயது வரையிலான சிறுமிகளை தாங்கள் அடையாளம் கண்டு கண்டுள்ளத்க்ஹாக அவர் கூறினார்.

விசாரணைகளுக்கு உதவுவதற்காக இரண்டு மலேசிய பெண்கள் மற்றும் 25 முதல் 60 வயதுடைய எட்டு வெளிநாட்டினர் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரின் வீட்டிலிருந்து பிறப்புச் சான்றிதழ்கள், மகப்பேறு பதிவு புத்தகங்கள், அடையாள அட்டைகள், வெற்று JPN படிவங்கள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள் இப்போது நலத்துறையின் பராமரிப்பில் இருப்பதாக குமார் கூறினார்.

காவல்துறை மற்றும் சர்வதேச நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு மாத கால நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக குமார் கூறினார். ஐந்து விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு ஆகஸ்ட் 21 அன்று சட்டத்துறை தலைமை அல்வலகத்திற்கு அனுப்பப்பட்டன என்று அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *