சிறுமியை சுத்தியலால் தாக்கிய நபர்! ரத்தம் சொட்டச் சொட்ட லிஃப்டுக்கு ஓடிய சிறுமி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 2: ஜொகூர் பாருவின் தாமான் உங்கு துன் அமினாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை உலோக சுத்தியலால் தாக்கியதாக 39 வயது நபர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜூலை 26 ஆம் தேதி மாலை 7.25 மணியளவில் சந்தேக நபர் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் பாரு உத்தாரா காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் கூறினார்.

சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான பல குற்றப் பின்னணி இருப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம் பெத்தமைன் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று பல்வீர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உச்சந்தலையில் காயம் மற்றும் வலது கையில் வீக்கம் ஏற்பட்டதால் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

சிறுமி இரத்தம் சொட்டச் சொட்ட லிஃப்டில் ஓடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *