நண்பரின் 9 மாதக் குழந்தையைக் கொலை செய்த ஆடவர்! நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 17: கடந்த வாரம் தனது நண்பரின் ஒன்பது மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக, ஒரு தொழிற்சாலை மேற்பார்வையாளர் மீது இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஏ. கார்த்தியாயினி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ​​37 வயதான ஷஹ்ரில் நஸ்ருல் ருஸ்லிம், புரிதலுடன் தலையசைத்தார்.

கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

ஏப்ரல் 6 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, கிள்ளான், தாமான் பாயு  பெர்டானாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், தனது நண்பரின் ஒன்பது மாதக் குழந்தையான முஹம்மது அர்ஸ்யாவைக் கொலை செய்ததாக ஷஹ்ரில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் உள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு, தண்டனை உறுதி செய்யப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

தடயவியல் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக, இந்த வழக்கு ஜூலை 6 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *