அந்தமான் தீவுகளை உலுக்கிய 5.4 ரிக்டர் நிலநடுக்கம்!
- Thinagaren Sanggaren
- 09 Nov, 2025
நவம்பர் 9,
அந்தமானில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்தின் அளவு 5.4 ரிக்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. அந்தமானைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதுவரையில் எந்தவோர் உயிர் சேதமும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணர்ப்பட்டிருப்பதாகவும் அந்தமான் தீவின் கடல் பகுதியில் 90 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடலுக்கடியில் நிகழ்ந்திருப்பதால் தீவில் வாழும் மக்களுக்கு
எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சுனாமி குறித்தான அச்சுறுத்தல்கள் ஏதும் இதுவரையில்
காணப்படாததால் சுனாமி எச்சரிக்கை விடுப்படவில்லை என்றாலும் வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து
கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தைச் சோதனையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



