எஃப். டி.ஏவை ஆசியானும் கனடாவும் இறுதி செய்ய வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 25-

ஆசியானும் கனடாவும், தங்களின் தடையற்ற வணிக ஒப்பந்தம், எஃப். டி.ஏ-வை விரைந்து இறுதி செய்ய வேண்டும்.இரு தரப்பினரும் எந்தவொரு பெரிய சந்தையையும் அதிகமாக நம்பியிருப்பதைத் தவிர்த்து பன்முகப்படுத்த முயற்சிப்பதாக கனடாவின் ஆசிய பசிபிக் அறவாரியம், எஃப். டி.ஏ கனடாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் நான்கிவெல் கூறினார்.

வாஷிங்டனின் வரிவிதிப்பு தொடர்ந்து உலகளாவிய வர்த்தகத்தைச் சீர்குலைத்து வருவதால், பன்முகப்படுத்துதல், உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலமும், ஒருங்கிணைந்த வட அமெரிக்கத் தடையற்ற வாணிப மண்டலத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலமும் நாம் ஒரு வளமான, நன்கு சமநிலையான, விரிவான பொருளாதாரமாக மாறிவிட்டோம். ஆனால், அதனுடன் ஆபத்தும் வருகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும், நீங்கள் ஒரு வணிகமாக இருந்தாலும் சரி, ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, ஒரு நாடாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு பங்காளி உறவை நம்பியிருந்தால், அங்கே ஆபத்து உள்ளது." என்று அவர் கூறினார்.

ஆசியான் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளதால், பூர்த்தி செய்யப்படாத தேவையைக் கனடா நிவர்த்தி செய்யத் தகுந்த நிலையில் உள்ளதோடு, ஆசியான் ஏற்றுமதிகளுக்கு வலுவான சந்தையாகவும் செயல்படுவதாக, ஜெஃப் நான்கிவெல் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *