மரத்தில் மோதிய கார் தீப்பிடித்துக் கொண்டதில் ஆடவர் கருகி மரணம்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், மே 11-

சிலாங்கூரின் கோல லங்காட்டில் நேற்று அதிகாலையில், ஒரு மரத்தில் மோதிய பின்னர் தீப்பிடித்துக் கொண்ட ஒரு காரினுள் சிக்கிக் கொண்ட ஓர் ஆடவர் தீயில் கருகி மாண்டார்.நேற்று அதிகாலை சுமார் 4.45 மணிக்கு நிகழ்ந்த அச்சாலை விபத்தின்போது, 49 வயதுடைய அவ்வாடவர் ஒட்டிச் சென்ற வாகனம் எதிரே இருந்த ஒரு மரத்தில் மோதிய பின்னர் தீப்பிடித்துக் கொண்டது.

அப்போது காரினுள் இருந்து வெளியேற முடியாமல் காருக்குள் சிக்கிக் கொண்ட அந்நபர் கருகி மாண்டதாக, ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தனர்.தீ அணைக்கப்பட்ட பின்னர் காரினுள் இருந்து மீட்கப்பட்ட அந்நபரின் சடலம் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

Seorang lelaki berusia 49 tahun maut dalam satu kemalangan di Jalan Kol Langkat, Shah Alam, selepas keretanya terbakar setelah merempuh pokok pada kira-kira 4:45 pagi semalam. Mangsa terperangkap dalam kereta dan maut akibat kebakaran. Mayatnya dihantar ke Hospital Shah Alam selepas api berjaya dipadamkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *