பிபிஆரில் ஆடவர் மரணம்!
- Muthu Kumar
- 29 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 29-
தன் காதலியுடன் தொலைபேசியில் உரையாடிய பிறகு ஜிஞ்சாங், பெரிஙின் பிபி ஆரில் ஆடவர் மரணமுற்ற நிலையில் காணப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.39 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் சுகார்னோ முகமட் ஸக்காரியா தெரிவித்தார்.
ஜிஞ்சாங், பெரிஙின் பிபி ஆரின் 11ஆவது மாடியிலிருந்து ஒருவர் கீழே விழுந்திருப்பதாக தொலைபேசி வாயிலாக போலிசுக்குப் புகார் வந்தது.இதன் தொடக்கக்கட்ட விசாரணைப்படி இவர் 11ஆவது மாடியிலுள்ள தனது வீட்டின் முன்புறத்தில் தவறி விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் தாழ்வார பகுதியில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி இருந்தது காணப்பட்டது.
பிபி ஆரின் 9, 11ஆவது மாடியில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி சம்பவத்திற்கு முன்பாக 25 வயதுடைய ஆடவர் தொலைபேசியில் பேசும் போது கத்திக் கொண்டிருந்ததாகக் கூறினர்.வீட்டை விட்டு மாலை 5.00 மணிக்கு வெளியேறுவதற்கு முன்பு மகன் தனது காதலியான வியட்னாமிய பெண்ணுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாக தாயார் கூறினார்.
வாக்குமூலம் கொடுக்க இந்த ஆடவரின் காதலி இன்னும் வரவில்லை. இது ஒரு திடீர் மரணச் சம்பவமாக வகைப்படுத்தப்படுவதாக ஓர் அறிக்கையில் ஏசிபி அகமட் சுகார்னோ முகமட் ஸக்காரியா குறிப்பிட்டார்.
Seorang lelaki berusia 25 tahun ditemui maut selepas dipercayai terjatuh dari tingkat 11 pangsapuri di Jinjang, KL. Sebelum kejadian, dia bertengkar melalui telefon dengan teman wanitanya dari Vietnam. Kes disiasat sebagai kematian mengejut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



