DAP கட்சிக்காக இதைச் செய்யலாமா? முகைதீன் கேள்வி

top-news
FREE WEBSITE AD

UEC விவகாரத்தில் அரசின் புதிய முடிவு அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

DAP ஆதரவை தக்கவைத்துக்கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை, Bahasa Melayu மொழியின் நிலை, தேசிய ஒற்றுமை மற்றும் மலேசிய அடையாளம் ஆகியவற்றின் தாக்கங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் இப்படியான முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

தான் கல்வி அமைச்சராக இருந்தபோது UEC அங்கீகாரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதன் பாடத்திட்டம் தேசிய கல்விக் கொள்கையுடன் பொருந்தவில்லை என கண்டறியப்பட்டதாகவும் முகைதீன் தெரிவித்தார்.

இந்நிலையில், முழுமையான SPM சான்றிதழ் பெற்ற tahfiz, தனியார் பள்ளி மற்றும் சீன சுயாட்சி பள்ளி மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும் அமைச்சரவை முடிவு தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *