அருகில் நிலச்சரிவு! வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் குடியிருப்புவாசிகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 26: கடந்த திங்கட்கிழமை செபூத்தே, தாமான் யுனைட்டெட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தரை அசைவு கண்டறியப்பட்டதை அடுத்து, தாமான் யுனைடெட் அடுக்குமாடி குடியிருப்புகளின் பிளாக் சி-யில் வசிக்கும் பலர், வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், இன்னும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.

சம்பவம் நடந்ததிலிருந்து தான் அந்த இடத்தில் இருந்ததாகவும், குடியிருப்பாளர்கள் மற்றும் தொகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று மீண்டும் அந்தப் பகுதியை பார்வையிட்டதாகவும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் கூறினார்.

கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL அதிக ஆபத்துள்ள பிரிவுகளில் வசிப்பவர்களை எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தடுக்க தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும், அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காக இணங்குமாறு அவர்களை வலியுறுத்தியதாகவும் கோக் கூறினார்.

தாமான் யுனைடெட், பிளாக் சி-யில் வசிக்கும் அனைவரும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக DBKL இன் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோக் கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை தங்க வைப்பதற்காக DBKL, ஸ்ரீ பெட்டாலிங் சமூக மையத்தில் ஒரு தற்காலிக வெளியேற்ற மையத்தையும் திறந்துள்ளது என்று அவர் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தரை நகர்வுக்கான காரணத்தைக் கண்டறியவும், தேவையான சாய்வு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடையாளம் காணவும் நிபுணர்கள் புவி தொழில்நுட்ப மதிப்பீட்டை நடத்துவார்கள் என்று கோக் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *