நாளை வங்சா மாஜுவில் நிலச்சரிவு உருவகப்படுத்துதல் பயிற்சி!
- Shan Siva
- 17 Sep, 2025
கோலாலம்பூர், செப் 17: தேசிய பேரிடர் தயார்நிலை முயற்சிகளின் ஒரு
பகுதியாக நாளை வாங்சா மாஜுவில் விரிவான நிலச்சரிவு உருவகப்படுத்துதல் பயிற்சி
நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fairview சர்வதேச பள்ளிக்கு எதிரே உள்ள மலைப்பாங்கான
பகுதியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தப் பயிற்சி நடைபெறும் என்று கோலாலம்பூர்
கூட்டரசுப் பிரதேசம் மற்றும் புத்ராஜெயா தகவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர்
காவல்துறை கூட்டரசுப் பிரதேசத் துறை மற்றும் மலேசிய தீயணைப்பு மீட்புத் துறையுடன்
இணைந்து இந்த நடவடிக்கையை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



