KLIA வழியே ஆபத்தான பொருள்களா? - MACC தீவிர விசாரணை

- Shan Siva
- 30 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 30: KLIA-க்கு வரும் சரக்குகள் மூலம் நாட்டிற்குள் ஆபத்தான பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான (MACC) விசாரித்து வருகிறது.
கடத்தப்பட்டதாகக்
கூறப்படும் பொருட்களில் ஊழல் கூறுகள் இருப்பதாக ஊழல் தடுப்பு நிறுவனத்திற்கு தகவல்
கிடைத்ததாக MACC வட்டாரம்
தெரிவித்துள்ளது.
எங்கள் முதற்கட்ட
விசாரணையின் அடிப்படையில், ஆபத்தான
பொருட்களில் வீட்டுப் பொருட்கள் என அறிவிக்கப்பட்ட ரசாயனப் பொருட்களும் அடங்கும் என்று
தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம்
மற்றும் சரக்கு ஏற்றுமதியில் தொடர்புடைய பிற தரப்பினரை MACC விசாரித்து வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும்,
நாட்டிற்குள் பொருட்களைக் கடத்த அனுமதித்த
நிர்வாகத்தில் உள்ள சாத்தியமான பலவீனங்களும் அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MACC அதன் விசாரணையில்
விமான நிலைய நிர்வாகம் மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை அந்த அமைப்பின் மூத்த புலனாய்வு இயக்குநர் இட்ரிஸ் ஜஹாருதீன் உறுதிப்படுத்தினார்!
MACC kini menyiasat dakwaan penyeludupan bahan berbahaya melalui KLIA, termasuk bahan kimia disamarkan sebagai barangan rumah. Aktiviti ini dikaitkan dengan unsur rasuah dan kelemahan pentadbiran, serta melibatkan kerjasama agensi penguat kuasa lain dalam siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *