AKPS அதிகாரிகள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் – தவறுகளுக்கு எவ்வித சமரசமும் இல்லை
- Tamil Malar (Reporter)
- 12 Jan, 2026
புத்ராஜெயா, ஜன. 12-
(AKPS)-யின் அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் உயர்ந்த நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்; அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஊழல் போன்ற எந்தச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சைன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகங்களின் பயன்பாடும் அதன் தாக்கமும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில், தவறான நடத்தை, ஊழல் சம்பவங்கள் எளிதில் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களிடையே பரவக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற செயல்களுக்கு தாம் எந்தவித சமரசமும் செய்யமாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், AKPS-ல் பொறுப்பேற்ற பிறகு பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், அமைப்புகள் மாற்றத்தை ஏற்காவிட்டால் சமூகம் தானாகவே மாற்றத்தைத் திணிக்கும் நிலை உருவாகும் என அவர் எச்சரித்தார்.
“நாம் நம்மைச் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல மாற்றத்தை உறுதி செய்யத் தவறினால், சமூகம் நம்மை மாற்றிவிடும். இன்றைய சூழலில் அந்த மாற்றம் சமூக ஊடகங்கள் வழியாக மிக வேகமாகவும் கடுமையாகவும் நிகழ்கிறது,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



