நிலச்சரிவில் சிக்கி வங்கதேசத் தொழிலாளி பலி!
- Shan Siva
- 15 Oct, 2025
டெங்கில், அக் 15: சைபர்சவுத் அருகே நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில்
சிக்கி வங்கதேச ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.
இது தொடர்பாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மாலை 4.19 மணிக்கு அவசர
அழைப்பு வந்ததை அடுத்து, டெங்கில்
நிலையத்திலிருந்து ஒரு குழு அவ்விடத்திற்கு விரைந்தது.
பாதிக்கப்பட்ட
இருவரும் தெனகா நேஷனல் பெர்ஹாட்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும்
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
ஒருவர் சம்பவ
இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சக ஊழியர்கள் அறிவித்தனர். மற்றொருவருக்கு
கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



