டாக்சி ஓட்டுநர்களுக்கு மொழி,நடத்தை விதி பயிற்சி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 28-

2026 மலேசியா வருகையாளர்கள் ஆண்டை முன்னிட்டு அடிப்படை மொழி மற்றும் ஓட்டுநர் நடத்தை விதி மீதான பயிற்சியை அளிப்பதற்குப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டு வருகிறது என்று அமைச்சர் லோக் சியூ ஃபூக் நேற்று தெரிவித்தார்.

டாக்சி தொழில்துறை என்பது வெறும் போக்குவரத்துத்துறை மட்டுமல்ல.ஆனால், அது பொதுச்சேவையின் இதயத் துடிப்பாகும். நமது நாட்டைப் பற்றிய நல்லெண்ணம் சுற்றுப்பயணிகளுக்கு ஏற்ப டாக்சி ஓட்டுநர்கள்தான் முதல் காரணமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

டாக்சி ஓட்டுநர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சொக்சோவின் ஊக்குவிப்புத் தொகையை பத்து விழுக்காட்டிலிருந்து முப்பது விழுக்காட்டுக்கு அரசாங்கம் உயர்த்தியிருப்பதாகவும் லோக் சுட்டிக் காட்டினார். இத்தகைய சீர்திருத்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு பலன்களைக் கொண்டு வருவதை உறுதிசெய்ய பொதுபோக்குவரத்துறை தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வரும் என்றார்.

முன்னதாக, மலேசியா டாக்சி, வாடகைக் கார், சொகுசு வாடகைக் கார் மற்றும் விமான நிலைய டாக்சி சங்கத்தின் (ஜிடிஎஸ்எம்) மூன்றாவது ஆண்டுக் கூட்டத்தை லோக் தொடக்கி வைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *