DAP உடன் முடியும்... பாஸ் கட்சியுடன் முடியாதா? - அக்மால் கேள்வி
- Shan Siva
- 15 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 15: UMNO இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சாலே,
UMNO மற்றும் PAS இடையிலான பழைய முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மலாய் ஒற்றுமைக்காக மீண்டும் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் எனஅழைப்பு விடுத்துள்ளார்.
UMNO இளைஞர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,நீண்டகால அரசியல் எதிரியான DAP உடன் UMNO இணைந்து செயல்பட முடிகிறபோது, முஸ்லிம் சகோதரக் கட்சியான PAS உடன் ஏன் இணைந்து செயல்பட முடியாது என்ற கேள்விய. அவர் எழுப்பினார்.
கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் முன்னே செல்ல முடியாது. அகம்பாவத்தை ஒதுக்கி வைத்து UMNOவை மேலும் உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டில் ‘ஹிம்புனான் தெகாட் உம்மா’ என்ற பெயரில் மலாய் அரசியல் கட்சிகள்,மலாய் அமைப்புகள் மற்றும்
கல்வியாளர்கள் பங்கேற்கும்பெரும் மாநாடு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இது வெறுப்பு அரசியல் அல்ல, விழிப்புணர்வு நிகழ்வு எனவும் அவர்தெளிவுபடுத்தினார்.
மேலும், UMNOவுக்குள் ஒற்றுமை ஏற்பட இடைநிறுத்தப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட உறுப்பினர்களைமீண்டும் கட்சியில் சேர்க்க தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடிமுன்வர வேண்டும் என்றும் அக்மால் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில், UMNO தனது அரசியல் நிலை குறித்து உண்மையை உணர வேண்டும் என்றும்,
“எல்லாம் சரியாக உள்ளது” என்ற மறுப்பு மனநிலையை விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



