மாட்டா கண்காட்சிக்கு பிரத்யேக பிளாட்டினம் ஆதரவாளராக ஆர்.எச்.பி வங்கி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்.3-

மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம், வரவிருக்கும் மாட்டா கண்காட்சிக்கான பிரத்யேக பிளாட்டினம் ஆதரவாளராக மீண்டும் ஆர்.எச்.பி வங்கி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்துள்ளது.இது ஆர்.எச்.பி வங்கி மற்றும் மாட்டா கண்காட்சிக்கான இடையிலான ஐந்தாவது தொடர் கூட்டாண்மையாகும்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுலா அனுபவங்களை எளிதாகவும் சுலபமாகவும் மாற்றும் இரு தரப்பினரின் அர்ப்பணிப்பை இது வலியுறுத்துகிறது. பார்வையாளர்கள், மைடேக்கில் நடைபெறும் கண்காட்சியில் ஆர்.எச்.பி வழங்கும் சிறப்பு சலுகைகளையும் நிதி தீர்வுகளையும் அனுபவிக்கலாம்.

57வது மாட்டா கண்காட்சி, இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய கண்காட்சியாக அமைய உள்ளது. மொத்தம் 2,049 ஸ்டால்களுடன், 40,820 சதுர அடி பரப்பளவில், 334 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

"சுற்றுலா அனுபவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இது மலேசியர்களின் ஆர்வமாகவும், உலகின் அழகை உணர்த்தும் வழியாகவும் திகழ்கிறது. ஆர்.எச்.பி வங்கியின் ஆதரவுடன் பயணத்தை மலிவாகவும் சிரமமின்றியும் செய்யக்கூடிய வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம் என மாட்டாவின் தலைவர் நைஜல் வாங் தெரிவித்துள்ளார்.

ஆர்.எச்.பி வங்கி. மாட்டா கண்காட்சியில் RHB Visa Card/- பயனர்களுக்கு விமான டிக்கெட், ஹோட்டல், டூர் புக்கிங் உள்ளிட்டவற்றில் ரிம 1,500 வரை தள்ளுபடி, மேலும் முஸ்லிம் பயணிகளுக்கு சிறப்பு தொகுப்புகளில் ரிம.800 வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஆர்.எச்.பி வங்கி குழுமத்தின் குழு சமூக வங்கித்துறை நிர்வாக இயக்குநர் ஜெஃப்ரி ங் கூறுகையில்:"வங்கி சேவைகள் எண்கள்,பரிமாற்றங்கள் மட்டும் அல்ல, வாடிக்கையாளர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ உதவுவதே எங்கள் நோக்கம். மாட்டா கூட்டாண்மையின் மூலம்,
எளிதான, பாதுகாப்பான பயண நிதி தீர்வுகளை வழங்குகிறோம்.என்றார்.

தற்போது 34 நாணயங்களை மாற்றுக் கட்டணமின்றி ஆதரிக்கும் RHB மல்டி-கரன்சி ஏளைய டெபிட் கார்டு-i 2025 ஜூலை நிலவரப்படி 1 லட்சம் கார்டுகளை கடந்துள்ளது. இதற்குப் புதிதாக அறிமுகமான RHB Pay Later- மூலம், பயணச் செலவுகளை 6 தவணைகளாகப் பிரித்து செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும், கண்காட்சி காலத்தில் புதிய கணக்கைத் திறக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் ரிம.500 வைப்பு செய்தால், ரிம.20 கேஷ்பேக் மற்றும் ரிம.20,000 வரை பரிசுத் தொகை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

மாட்டா கண்காட்சிக்கு இலவச நுழைவு வழங்கப்பட்டுள்ளதுடன், காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை வெள்ளி-ஞாயிறு திறந்திருக்கும். பார்வையாளர்களுக்காக KL Sentral மற்றும் Sunway Putra Mall-இல் இருந்து மாட்டாக்கு இலவச ஷட்டில் பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *