வட்டி விகிதத்தை 2.75ஆக குறைத்தது பேங்க் நெகாரா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 10-

உலகளாவிய நிலையில் நிச்சயமற்றதன்மை நிலவிவரும் வேளையில், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்காக அடிப்படை வட்டி விகிதத்தை (ஓபிஆர்) மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா 2.75 விழுக்காடாகக் குறைத்துள்ளது. உச்சவரம்பு வட்டி விகிதம் 3.00 விழுக்காடாகவும் அடிப்படை வட்டி விகிதம் 2.50 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று  குறிப்பிட்டது.

நாட்டின் பணவீக்க அளவு மிதமான நிலையில் இருந்துவரும் இந்நிலையில், வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து பேணி வருவதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் மத்திய வங்கி கூறியது.

உள்நாட்டுப் பொருளாதாரம் வலுவாக காலூன்றியிருந்தாலும், புற நிகழ்வுகளால் விளையக்கூடிய நிச்சயமன்ற தன்மைகள் நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டது.

Bank Negara Malaysia menurunkan Kadar Dasar Semalaman (OPR) kepada 2.75% bagi mengekalkan kestabilan ekonomi negara. Langkah ini diambil bagi memastikan pertumbuhan ekonomi berterusan walaupun inflasi terkawal dan ketidaktentuan ekonomi global meningkat.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *