ஜி.டி.பி வளர்ச்சிக்கான கணிப்பை பேங்க் நெகாரா திருத்தியமைத்தது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 29-

2025-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி வளர்ச்சிக்கான கணிப்பை, 4.0 விழுக்காட்டில் இருந்து 4.8 விழுக்காடாக, பேங்க நெகாரா மலேசியா திருத்தியமைத்துள்ளது.முன்னதாக அக்கணிப்பு, 4.5 விழுக்காட்டில் இருந்து 5.5 விழுக்காடாக இருந்தது.

தொடர்ச்சியான வரி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வர்த்தக பேச்சுகளின் மிகவும் சாதகமான விளைவு உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்பு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சி குறைகிறதா அல்லது துரிதப்படுத்துகிறதா எனும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளைப் பொறுத்தே அக்கணிப்பு இருக்கும் என்று பி.என்.எம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊக்குவிக்கும் வர்த்தக பேச்சுகள், மேம்பாடு அடைந்த நாடுகளில் வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைகள், மின்சாரம், மின்னணு பொருட்களுக்கான தொடர்ச்சியான தேவை, தீவிர சுற்றுலா நடவடிக்கைகள் மூலம் மலேசியாவின் ஏற்றுமதி, வளர்ச்சி வாய்ப்புகள் மேம்படுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்ட போதிலும், மலேசியப் பொருளாதாரம் மீள்தன்மையுடன் இருப்பதோடு, பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களின் முடிவுகளால் இது ஆதரிக்கப்படுவதாகவும் ஆளுநர் டத்தோஸ்ரீ ரஷீட் கஃபார் கூறினார்.

அதோடு, 2025-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம், மிதமானதாக இருக்கும் என்றும், சராசரியாக 1.5 விழுக்காடு முதல் 2.3 விழுக்காடு வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *