ஒரு வாரமாக காணாமல் போன ஆடவர்-கார் அருகே சடலமாக மீட்பு!
- Muthu Kumar
- 18 Aug, 2025
காபிட், ஆக.18-
கடந்த ஒருவாரமாக காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர், சரவாக், சிபுவில் இருந்து, சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், காபிட் பாலே நீர்மின் அணைக்கு செல்லும் சாலையில், பள்ளத்தாக்கில் விழுந்த கார் அருகே இறந்த நிலையில் காணப்பட்டார்.
54 வயதுடைய பிக்கா ரங்கா என்ற அவ்வாடவர் வாகனம் நிறுத்தப்பட்ட தொலைவில் காணப்பட்டதாக காபிட் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி ரொஹானா நானு தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் உடல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக முயயீவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறியிருந்தார்.
இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை பிற்பகல் 3.06 மணிக்கு தமது தரப்பிற்கு கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து காப்பிட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிபு தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைவர் ஏன்டி ஏலி தெரிவித்தார்.
மாலை 4.08 மணியளவில் அங்கு வந்த சேர்ந்த படையினர், பிரதான சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு பெரோடுவா பேசா ரசு வாகனத்தைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



