பேட்மிண்டன் வீரர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கண்காணிக்கும் ஹன்னா இயோ!
- Muthu Kumar
- 19 Aug, 2025
புத்ராஜெயா, ஆக. 19-
மலேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பாரிஸில் நடைபெறவுள்ள உலக பூப்பந்து போட்டியில் பங்கேற்கும் தேசிய பூப்பந்து வீரர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கண்காணிப்பார் என்று தெரிவித்தார்.
'ரோட் டு கோல்டு' திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் வீரர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு இந்தப் போட்டி முக்கியமானது. ஆர்திஜி குழுவின் தலைவராகவும் இருக்கும் ஹன்னா, இந்த உயர்மட்டப் போட்டி உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மட்டுமல்ல. நீண்டகால அடிப்படையில் தேசிய உயர்தர விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று கூறினார்.
நிச்சயமாக, நாம் அனைவரும் சிறந்த முடிவுகளை எதிர்பார்க்கிறோம். ஆனால், ஆர்திஜியின் முக்கிய செயல்பாட்டு குறிகாட்டிகள் ஒரு போட்டியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை. இது இரண்டு ஆண்டுகளுக்கு உலக தரவரிசையை அடிப்படையாகக் கொண்டு கண்காணிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய விளையாட்டு நிறுவனத்தின் குழு, ஆர்தீஜி வீரர்களை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பூப்பந்து வீரர்கள் மிகவும் அடர்த்தியான போட்டி அட்டவணையால் சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார். காயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன், ஏனெனில் காயங்கள் தான் மிகப்பெரிய சவாலாக உள்ளன என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



