சாலை வரி செலுத்துவதைத் தவிர்க்கும் சொகுசு கார் உரிமையாளர்களில் டான்ஸ்ரீ, அரசியல்வாதிகளும் உள்ளனர்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 26-

சாலை வரி செலுத்துவதைத் தவிர்க்கும் சொகுசு கார் உரிமையாளர்களில் டான்ஸ்ரீ, அரசியல்வாதிகளும் உள்ளனர் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

டான்ஸ்ரீ பட்டம் கொண்டவர்கள், அரசியல்வாதிகள், முக்கிய தொழிலதிபர்கள் உட்பட சொகுசு வாகன உரிமையாளர்கள் சாலை வரியை புதுப்பிப்பதில் மோசடி செய்து பிடிபட்டனர்.இதன் மொத்த நிலுவைத் தொகை 35.7 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
ஜேபிஜே எனப்படும் சாலைப் போக்குவரத்துத் துறை தரவுகளில் உள்ளவர்களுக்குச் சொந்தமான ஐந்து வகையான சொகுசு வாகனங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தயாரிக்கப்பட்டது.

ஐந்து வகையான சொகுசு வாகனங்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்பாய்வின் முடிவுகள்,345 ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி (372), பென்ட்லி (660), ஃபெராரி (675), போர்ஷே (4,308) கார்கள் தங்கள் சாலை வரியை புதுப்பிக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

உரிமையாளர், வாகன வகை, காலாவதியான சாலை வரி காலம் பற்றிய அனைத்து தகவல்களும் ஜேபிஜேயில் உள்ளன.மேலும் அவர்களில் சிலர் டான்ஸ்ரீ, அரசியல்வாதிகள் அல்லது பிரபல தொழிலதிபர்கள் என்றாலும், யாரையும் சங்கடப்படுத்த விரும்பாததால் அவர்களின் பெயர்களை நான் அறிவிக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *