சாலையோரத்தில் ஆடவர் உடல்! -கிள்ளானில் பரபரப்பு
- Shan Siva
- 11 Sep, 2025
கோலாலம்பூர், : இன்று கிள்ளான், காப்பாரில் சாலையோரத்தில் ஆடவர் ஒருவரின் உடல் காயங்களுடன்
கண்டெடுக்கப்பட்டது.
33 வயது சம்பந்தப்பட்ட
நபர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக கிளான் உத்தாரா காவல்துறைத் தலைவர் எஸ்.
விஜய ராவ் தெரிவித்தார்
கம்போங் பெரேபாட், ஜாலான் கெம்பாஸ் கிரியில் ஆடவரின் உடல் கிடந்ததாக அதிகாலை
3.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
இதனை அடுத்து பிரேதப்
பரிசோதனைக்காக கிள்ளான், தெங்கு
அம்புவான் ரஹ்மா மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டது.
முன்னதாக,
கம்போங் பெரேபாட்டின் ஜாலான் கெம்பாஸ் கிரியில்
நேற்று மாலை முதல் சாலையோரத்தில் விடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காருக்கு வெளியே
ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்ததாகக் கூறும்
ஒரு முகநூல் பதிவு வைரலாகியது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



