ஆற்றில் மிதந்த ஆடவர் தலை! - முதலை தாக்கியிருக்கலாம் என சந்தேகம்
- Shan Siva
- 11 Sep, 2025
சிபு: Kampung Siang-Siang
Laut ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, முதலையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும்
முதியவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்டவர்
கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கிராம மக்கள் அம்முதியவரி துண்டிக்கப்பட்ட
தலையைக் கண்டுபிடித்தனர்.
இரவு 11.20 மணிக்கு இது குறித்து அழைப்பு வந்ததை அடுத்து
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அந்த இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையிடம்
ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, அதிகாலை 12.45 மணிக்கு குடும்ப உறுப்பினர்கள் அது
பாதிக்கப்பட்டவரின் தலை என்பதை உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டவரின்
மீதமுள்ள உடலைத் தேடும் பணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான துவா
லமாத் என்ற சம்பந்தப்பட்ட முதியவர் மாலை 5.30 மணிக்கு தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் குளித்தபோது
காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



