சிறந்த கொள்கைகளை எதிர்க்கட்சியினரால் முன்வைக்க முடியுமா?

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28-

ஒற்றுமை அரசாங்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் கொள்கைகளைவிட சிறந்த கொள்கைகளை எதிர்க்கட்சியினால் அமல்படுத்த முடியுமா என்று சைஃபுடின் கேள்வி
பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் சவால் விடுத்துள்ளார்.

பாஸ் கட்சியின் இளைஞர் பகுதி ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற அன்வார் எதிர்ப்புப் பேரணியை மட்டுப்படுத்தி பேசிய அவர், மடானி அரசாங்கம் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் ரொக்க உதவித்தொகை வழங்குவதும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மாற்றாக, எதிர்க்கட்சியினர் வைத்துள்ள கொள்கைகள் யாவை என்பதை அவர்கள் விளக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம். அரசாங்கக் கொள்கைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், உங்களின் வசமுள்ள மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் யாவை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று சைஃபுடின் கூறினார்.

ரோன் 95 பெட்ரோல் விலை ஆறு காசுகள் குறைக்கப்பட்டது போதுமானதல்ல என்று நீங்கள் கருதினால், எத்தனை காசுகளை உங்களால் குறைக்க முடியும் என்பதையும் எந்த வழிமுறைகள் மூலம் அதனைச் செய்ய முடியும் என்பதையும் நீங்கள் (எதிர்க்கட்சியினர்) பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். எங்களிடம் கொள்கைகளும் திட்டங்களும் உள்ளன. ஆனால், கண்மூடித்தனமான வசவுகளை அள்ளி இறைப்பது போன்ற இழிவான அரசியலை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார் அவர்.

பதின்மூன்றாவது மலேசியத் திட்ட அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாற்று அணியாக இருப்பதற்கு தங்களுக்குத் தகுதி உள்ளது என்பதை நிரூபிக்க அரசியல் கட்சியினருக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும் என்று சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *