MCAஆதரவாளர்களை டி.ஏ.பி திருடியதா? Anthony Loke விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 14 Jul, 2025
ஜூலை 14,
கடந்த பொதுத்தேர்தலில் ம.சீ.சவின் ஆதரவாளர்களைப் பொய்யான வாக்குறுதிகள் மூலமாக டி.ஏ.பி கவர்ந்து ஈர்த்ததாக ம.சி.சாவின் உதவித் தலைவர் Datuk Tan Teik Cheng தெரிவித்த கருத்து அடிப்படையற்ற குற்றச்சாட்டு என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான Anthony Loke தெரிவித்தார். உண்மையில் இந்த ம.சீ.ச சொல்வதைப் போல டி.ஏ.பி எந்த கட்சியின் ஆதரவாளர்களையும் திருடவில்லை. ம.சீ.சவுக்குப் பொழுது போகவில்லை என்றால் ஊறுகாயைப் போல அவ்வப்போது டி.ஏ.பியை வம்பிழுப்பார்கள். நாங்களும் மலேசியாவின் அரசியலில் இருக்கிறோம் என்பதற்காக சில நேரங்களில் இப்படி எதையாவது ஆதாரமே இல்லாமல் உளறுவார்கள். இதையெல்லாம் பெருட்படுத்த வேண்டாம் என Anthony Loke தெரிவித்தார்.
டி.ஏ.பி கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. கட்சியின் ஆதரவாளர்கள் டி.ஏ.பிக்காக உண்மையாக இருக்கிறார்கள். அவர்களை நம்பி தான் கட்சியும் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது. நாங்கள் வாக்குறுதி அளித்தது மக்களுக்குத் தான். நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள். ம.சீ.சவின் இந்த மாதிரியானக் கருத்துகளால் டி.ஏ.பி எதுவுமே செய்யவில்லை என பொருள்படாது என்றும் இது ம.சீ.சவின் அரசியல் விளையாட்டு என்றும், பாரிசானுக்கு எதிராக கடந்த வாரம் பேசினார்கள். இந்த வாரம் டி.ஏ.பிக்கு எதிராகப் பேசுகிறார்கள். அடுத்த வாரம் இன்னொரு கட்சியைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவார்கள். இதைத் தான் ம.சீ.ச காலம் காலமாகச் செய்து வருகிறது என Anthony Loke தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



