அரசாங்கத்தில் நாட்டாமை செய்ய வேண்டாம்! – அந்தோணி லோக்!
- THINAGAREN SANGGAREN
- 06 Jul, 2026
ஜூலை 6,
தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் ஒரு கட்சி மட்டுமே வெற்றி பெற்றால் நாட்டாமைகள் உருவாகுவார்கள் என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளர் Anthony Loke எச்சரிக்கை விடுத்தார். தனி ஒரு கட்சிக்குச் சர்வ வல்லமையும் கொடுத்தால் அது சர்வாதிகார ஆட்சியையே நடத்தும் என Anthony Loke சுட்டிக்காட்டினார். அரசியல் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் மக்களின் குரலையோ, மக்களின் பிரச்சனைக்கோ தீர்வை வழங்காது. ஜொகூரில் அரசியல் கட்சிகளுக்குச் சமமான அரசியல் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என ஜொகூர் மக்களை Anthony Loke கேட்டுக்கொண்டார்.
பக்காத்தான் கூட்டணியில் பி.கே.ஆர், டி.ஏ.பி, அமானா ஆகிய கட்சிகளில் எந்தவொரு கட்சியும் தனித்த பெரும்பான்மையில் அதிகாரம் செய்வதில்லை. ஆனால் பாரிசான் கூட்டணியில் தனிப்பட்ட ஒரு கட்சியின் முடிவே அந்த கூட்டணியின் முடிவாக உள்ளது என Anthony Loke அம்னோவை மறைமுகமாகச் சாடினார். ஜொகூரின் அதிகாரத்தை நாம் சமநிலைப்படுத்த வேண்டிய தேர்தல் இது. மக்களின் குரலைக் கேட்டு, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே ஓர் அரசாங்கம் இயங்க வேண்டும் எனில் ஜொகூர் வாக்காளர்கள், அனைத்து கட்சிகளையும் சரிசமமாக நடத்தும் கூட்டணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பக்காத்தான் கூட்டணியின் துணைத் தலைவருமான Anthony Loke வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



