இந்தியர்கள் மீது அந்தோணி லோக்கிற்குப் பாசம் அதிகம்! அமைச்சர் ரமணன் புகழாரம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 7,

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் செலிக் மடானி, தர்ம மடானி நிதிகள் வழங்கும் விழாவில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கலந்து கொண்டது மனத்துக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மித்ராவின் செயல்திட்டங்கள் குறித்து அந்தோணி லோக் நுணுக்கமாகக் கேட்டு அறிந்தது இந்தியர்களின் மீது அக்கறையும் பாசமும் கொண்ட அமைச்சராக அந்தோணி லோக் திகழ்கிறார் என மனிதவள அமைச்சர்  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மித்ராவின் செலிக் மடானி
, திட்டத்திற்கு மடானி அரசு 8.87 மில்லியன் ரிங்கிட் வழங்கியிருப்பதாகவும் இதன் மூலமாக 3,612 இந்திய குழந்தைகளின் ஆரம்பக் கல்வி தடையின்றி கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளதாகவும் மனிதவள அமைச்சர்  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மித்ராவின் தர்மா மடானி திட்டத்திற்கு மடானி அரசு 12.54 மில்லியன் நிதியை வழங்கியிருப்பதாகவும் இதன் மூலம் நாடு முழுவதும் 627 ஆலயங்கள் பயன்பெறுவது மட்டுமின்றி
, மித்ரா நிதியைப் பெறும் கோயில்கள் இந்திய சமூக நலத்திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுக்கும் என மனிதவள அமைச்சர்  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *