பந்திங் மாணவர் விபத்தில் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலா லங்காட், ஜூன் 26: தெலூக் டத்தோக் பாலம் அருகே, ஜாலான் கிள்ளான்-பந்திங்-போர்ட் டிக்சனின் பாதையில் கிலோமீட்டர் 32 இல், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

மாலை 5.10 மணியளவில் 17 வயது இளைஞன் தெலூக் டத்தோக்கில் இருந்து பந்திங்கை நோக்கிச் செல்கையில்,  இந்தச் சம்பவம் நடந்ததாக ம் கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் அக்மல்ரிசல் ராட்ஸி கூறினார்.

பாதிக்கப்பட்டவர் பந்திங்கில் உள்ள கோலேஜ் வொகேஷனல் மாணவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறப் பாதையில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

50 வயதுடைய ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட  லாரி, பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் கனரக வாகனத்தின் கீழ் சிக்கிக்கொண்டனர் என்று அவர் இன்று கூறினார்.

இதனை அடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது!

Seorang pelajar kolej vokasional maut dilanggar lori selepas terjatuh dari motosikalnya di KM32, Jalan Klang-Banting-Port Dickson. Kejadian berlaku jam 5.10 petang. Kes disiasat di bawah Seksyen 41(1) Akta Pengangkutan Jalan 1987.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *