ரம்புத்தான் மரத்தில் சிக்கியவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!
- Shan Siva
- 24 Nov, 2025
தாசெக் குளுகோர், நவ 24: ரம்புத்தான் மரத்தில் 6 மீட்டர் உயரத்தில் சிக்கிய ஒருவரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். சம்பந்தபட்ட நபர் மரத்தில் இருந்தபோது, ஒரு கிளை கஅவர் மீது விழுந்ததால் அவர் கீழே இறங்க முடியாமல் தவித்தார்.
சம்பந்தப்பட்ட 26 வயது நபர் ரம்புத்தான் மரத்தில் ஏறி ஒரு கிளையை வெட்டினார். அப்போது அந்த கிளை அவர் மீது விழுந்தது. இதனால் முதுகு வலி ஏற்பட்டு அவர் கீழே இறங்க முடியாமல் தவித்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் ஏணியைப் பயன்படுத்தி அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். அவர் சுயநினைவுடன் மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



