விறுவிறுப்பான கிரைம் திரில்லர் தொடரில் நடிக்க ஆசையா? நடிகர்கள் தேர்வில் கலந்துகொள்ளுங்கள்!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஏப் 15: மலேசியத் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது 'இன்ஸ்டா ப்ரொடக்ஷன்ஸ்'  (Insta Productions).   இந்நிறுவனத்தின் முதல் பிரம்மாண்டத் தயாரிப்பாக, விறுவிறுப்பான மற்றும் அதிரடியான ஒரு ‘தமிழ் வெப் சீரிஸ் (Web Series)’ உருவாக உள்ளது. 

இந்தத் தொடர் தமிழ்நாடு மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முன்னணி மற்றும் திறமையான புதுமுக நடிகர்களை இணைக்கும் ஒரு பாலமாக அமையவிருக்கிறது.

விறுவிறுப்பான கிரைம் திரில்லர் (Crime Thriller) கதையாக உருவாகவிருக்கும் இந்தத் தொடரின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவின்  கோலாலம்பூர் (Kuala Lumpur)  மற்றும்  ஈப்போ (Ipoh)  ஆகிய பகுதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக மற்றும் மலேசியத் தமிழ்க் கலைஞர்கள் இணைந்து புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது இந்தத் தொடர்.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான நடிகர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Lot 28167, Ground Floor, Batu 4, Jln Gombak, Kampung Kuantan, 53000 Kuala Lumpur என்ற முகவரியில் உள்ள 'QACA HOUSE'  ஹாலில்  பகல்  12 மணி முதல் இரவு 7 மணி வரை  நடைபெறவுள்ளது. 

நடிப்பின் மீது அதீத ஆர்வமும், திரையில் தோன்றும் கனவும் கொண்டவர்கள் இந்தப் பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினருக்கும் வாய்ப்பு உண்டு. முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் நடிப்பின் மீது ஆர்வமுள்ள புதுமுகங்கள் என அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கான படப்பிடிப்பு, வரும் ஜூலை மாதம் மலேசியாவில் தொடங்க உள்ளது.

இந்த நடிகர்கள் தேர்வில் (Audition) கலந்து கொள்ள விரும்புபவர்கள் அல்லது மேலதிக விவரங்கள் தேவைப்படுபவர்கள், நிறுவனத்தின் நிர்வாகி இஷாமை 011-71177716 என்ற   எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் திறமையை உலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு சிறந்த மேடை. மலேசியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில், ஒரு தரமான கிரைம் திரில்லரில் பங்குபெறத் தயாராகுங்கள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *