அன்வாரின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை! புதிய பட்ஜெட்டை அறிவிக்கும் பெரிக்காத்தான்! – பாஸ் கட்சி!
- Thinagaren Sanggaren
- 12 Oct, 2025
அக்தோபர் 12,
பிரதமர் அன்வார் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் கடந்த ஆண்டுகளைப் போலவே எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருப்பதால் பெரிக்காத்தான் அதன் புதிய பட்ஜெட்டை வெளியிடவிருப்பதாகப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெரிய் பெரிய ஓட்டைகள் உள்ளதால் இது மக்களுக்குப் பயனளிக்காது என Datuk Seri Takiyuddin Hassan சாடினார். நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் பெரிக்காத்தான் அதன் புதிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருப்பதாகவும் மக்களின் நிறந்தர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்த பட்ஜெட் இருக்கும் என்றும் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.
அன்வார் அறிவித்திருக்கும் பட்ஜெட் தொழில்துறைகளும் அரசு துறைகளுக்கும் மட்டுமே பயனளிக்கும் என்றும் மக்களுக்கு அது ஒரு நீண்ட கால பயனை அளிக்காது என்றும் Datuk Seri Takiyuddin Hassan சாடினார். மக்களுக்கு ONE OF திட்டத்தில் சலுகைகளை வழங்குவதால் மக்களின்ன் வாழ்வாதாரம் உயராது என்பதை அன்வார் புரிந்திருக்கவில்லை என Datuk Seri Takiyuddin Hassan சுட்டிக்காட்டினார். இப்படியான பட்ஜெட்டை நாம் ஏற்றுக் கொள்வதால் மக்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்கும் என Datuk Seri Takiyuddin Hassan எச்சரிக்கை விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



