Hadi Awang நலமாக இருக்க பிராத்திக்கிறேன்! – பிரதமர் அன்வார்!

top-news

ஜூன் 18,


பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang உடல் நலக்குறைவால் தேசிய இருதயச் சிகிச்சை மையத்தில் அனுமத்திக்கப்பட்டிருக்கும் செய்தி வருத்தத்தை அளிப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். Tan Sri Abdul Hadi Awang உடல் நலத்துடன் மீண்டு வர தாமும் பிராத்தனை செய்வதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். 

அரசியல் வேறுபாடுகள் பல அவருடன் தனக்கு இருந்தாலும் அவை தனிப்பட்ட முறையில் இருந்ததில்லை என்றும் Tan Sri Abdul Hadi Awang தலைமையிலானப் பாஸ் கட்சியினருடன் மக்களும் அவர் நலமாக இருக்க வேண்டுமென பிராத்தனை செய்யும்படி பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டார். முன்னதாக Tan Sri Abdul Hadi Awang உடல் நலக் குறைவால் IJN சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருவதை Tan Sri Abdul Hadi Awang இன் செயலாளரும் Bachok நாடாளுமன்ற உறுப்பினருமான Mohd Syahir Che Sulaiman தெரிவித்திருந்தார்.


PM Anwar Ibrahim mendoakan kesembuhan Presiden PAS, Tan Sri Abdul Hadi Awang, yang sedang dirawat di IJN akibat masalah kesihatan. Walaupun berbeza pandangan politik, Anwar berharap rakyat turut mendoakan kesejahteraan kesihatan Hadi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *