மத்திய கிழக்கு பதற்றம்: கட்டுப்பாடு மற்றும் புத்திசாலித்தனம் அவசியம் – அன்வார் இப்ராஹிம், எர்டோகான் வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 06 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 6-
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமை குறித்து மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகான் இருவரும் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலைமை மேலும் தீவிரமடையாமல் இருக்க அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாடும் உயர்ந்த புத்திசாலித்தனமும் காட்ட வேண்டும் என்று அவர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு எர்டோகான், அன்வார் இப்ராஹிமுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மத்திய கிழக்கில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து கருத்து பரிமாற்றம் செய்தார். அந்த பிராந்தியத்தில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள் அந்த பகுதியின் நிலைத்தன்மையைப் பாதிக்கக் கூடும் என்ற கவலை இரு தலைவர்களிடமும் காணப்பட்டது.
இந்த உரையாடலின் போது, ஈரானில் சில உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார். குறிப்பாக ஈரானின் உயர்ந்த மத மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆயத்துல்லா அலி காமேனி தொடர்பான சம்பவம் குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வுகள் மேற்கு ஆசியப் பகுதியை நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்பு அசாதாரண நிலைக்குள் தள்ளும் அபாயம் இருப்பதாக அன்வார் எச்சரித்தார்.
மேலும், பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் காக்க அனைத்து நாடுகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



