அன்வாருடைய நண்பரின் மகள் FADHLINA! அதான் அமைச்சராக நீடிக்கிறார்! – RAFIZI அதிருப்தி!
- Thinagaren Sanggaren
- 21 Dec, 2025
டிசம்பர் 21,
கடந்த வாரம்
அன்வார் அமைச்சரவை சீர்திருத்தம் செய்திப்பது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகப்
பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். குறிப்பாகக் கல்வி அமைச்சில் எந்தவொரு மாற்றமும் செய்யயாமல் இருப்பது பெருமளவில்
கேள்வியை எழுப்பியுள்ளதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
அன்வார் தலைமையிலான மடானி ஆட்சியில் பொதுமக்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டது கல்வி
அமைச்சர் FADHLINA SIDEK என்றாலும் அன்வார் கல்வி அமைச்சரை மாற்றம்
செய்யவில்லை என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் FADHLINAவின் தந்தையும் அன்வாரும் பாலிய காலத்து நண்பர்கள் என்பதால் அன்வார் FADHLINAவைத் தற்காக்க நினைக்கிறாரோ எனும் கேள்வி தனக்குள் எழுந்திருப்பதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். கட்சியின் தலைமை பொறுப்புகளுக்கு ஏற்ப அமைச்சரவை வழங்கப்படுவது என்பதைத் தாம் ஏற்றுக்கொண்டாலும் கடந்த சில மாதங்களாக மக்களிடையே அதிகமான அதிருப்தியைப் பெற்றிக்கும் அமைச்சராக FADHLINA SIDEK இருக்கிறார் என்பதை அன்வார் அறிந்தும் அவரைக் கல்வி அமைச்சராக நீட்டிக்க அன்வார் ஒப்புதல் அளித்திருப்பது வருத்தமாக இருப்பதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
கல்வி அமைச்சராக
இருக்கும் FADHLINA SIDEK-இன் தந்தை Profesor Dato' Dr. Siddiq Fadzil அன்வாரின்
50 ஆண்டுகள் கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்வார் தேசிய இஸ்லாமிய இளைஞர் பேரவையின்
தலைவர் பொறுப்பிலிருந்து 1982 விலகியதும் அதன் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றவர் FADHLINA SIDEK-இன் தந்தையான
Profesor Dato' Dr. Siddiq Fadzil. 1990 ஆம் ஆண்டிலேயே FADHLINA SIDEK-இன் தந்தையான
Profesor Dato' Dr. Siddiq Fadzil மடானி கொள்கைகள் குறித்து ஆய்வுக்
கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



