“ருமா பங்க்சா முயற்சி அன்வாரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் – சைட் அபு ஹுசின்”
- Surendran Sumdraraj
- 23 Mar, 2026
சுபாங் ஜெயா, மார்ச் 23-
முன்னாள் UMNO உறுப்பினர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ள “ருமா பங்சா” முயற்சி, அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக பிரதமரையும் இணைத்துக் கொள்ள முயல வேண்டும் என புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைட் அபு ஹுசின் ஹபீஸ் சைட் அப்துல் பாசல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த முயற்சி UMNO-வில் இருந்து நீக்கப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், பிற அரசியல் தலைவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்றார். குறிப்பாக, தற்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூட இதில் இணைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“UMNO தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி உருவாக்கிய ‘ருமா பங்க்சா’ என்பது மிகப்பெரிய நோக்கத்தைக் கொண்டது. அவர் நீக்கியவர்களை மீண்டும் எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்,” என்று அவர் கூறினார்.
மேலும், ‘ருமா பங்க்சா’ என்பது UMNO உறுப்பினர்களுக்கானதல்ல, மாறாக மலாய் சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய தளமாக இருக்க வேண்டும் என்றார். அன்வார் இப்ராஹிம் முன்னாள் UMNO தலைவராக இருந்ததை நினைவுபடுத்திய அவர், அவரையும் இந்த முயற்சியில் இணைப்பது பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



