அன்வாரே நினைத்தாலும் கெடாவில் ஆட்சி அமைக்க முடியாது! சனூசி சூளுரை!
- THINAGAREN SANGGAREN
- 13 Jun, 2026
ஜூன் 13,
கெடாவில் பாஸ் கட்சி தனிப்பெரும்பான்மையில் அமைத்திருக்கும் ஆட்சியை அன்வாரே நினைத்தாலும் கலைக்க முடியாது என கெடா மெந்திரி பெசாரும் பெரிக்காத்தானின் தேர்தல் குழு தலைவருமான Datuk Seri Sanusi Nor சூளுரைத்தார். அன்வாரே நினைத்தாலும் கெடாவில் அன்வாரால் ஆட்சி அமைக்க முடியாத அளவிற்குப் பாஸ் கட்சி கெடாவில் பலமாக அரசியல் கட்சியாகத் திகழ்கிறது என Datuk Seri Sanusi Nor தெரிவித்தார். கெடாவில் அடுத்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலைப் பாஸ் கட்சி தனித்து போட்டியிடும் அளவிற்குப் பலமாக உள்ளது என்றாலும் கூட்டணிக் கட்சிகளுக்குத் தலா ஒரு சட்டமன்றத்தை வழங்க பாஸ் கட்சி உறுதியளித்துள்ளது.
கடந்த 2023 கெடா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட்ட 21 சட்டமன்றங்களில் அனைத்து சட்டமன்றத்திலும் வெற்றி பெற்றது. பெர்சத்து 12 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 11 சட்டமன்றங்களில் வெற்றி பெற்றது. இப்போது பெர்சத்து பாஸ் கட்சியின் கூட்டணியில் இல்லை என்பதால் அடுத்த கெடா மாநிலச் சட்டமன்றத்தில் பாஸ் கட்சி 33 சட்டமன்றங்களிலும் போட்டியிடும் என Datuk Seri Sanusi Nor தெரிவித்தார். கெடாவில் பாரிசானும் பக்காத்தானும் இணைந்து போட்டியிட்ட நிலையில் பக்காத்தானின் பி.கே.ஆர் 10 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 2 சட்டமன்றங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. டி.ஏ.பி ஒரு சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அமானா 10 சட்டமன்றங்களில் போட்டியிட்டு ஒரு சட்டமன்றத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாரிசான் 15 சட்டமன்றங்களில் போட்டியிட்டு அனைத்து சட்டமன்றங்களிலும் தோல்வி அடைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



