நான் பதவி விலகுகிறேன்! ஆனால்? – பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 20,

நாட்டின் பிரதமர் பொறுப்பிலிருந்து என்னைப் பதவி விலகும்படி சூளுரைப்பவர்கள் ஆதாரத்த்துடன் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். பிரதமராக் என்னுடையா அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் ஊழல் செய்தேனா? நிதி முறைக்கேடுகளில் சம்மந்தப்பட்டிருக்கிறேனே? அல்லது யாரையேனும் மிரட்டி என்னுடைய சொந்த பாக்கெட்டை நிரப்பினேனா? ஆனால் இதையெல்லாம் முன்னதாக ஆட்சியில் இருந்து செய்தவர்கள் என இப்போது நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கும் தரப்பினர் என்னை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினால் நான் பதவி விலகமாட்டேன் என Datuk Seri Anwar Ibrahim திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தன்னுடைய 3 ஆண்டுகள் பிரதமர் பதவிக் காலத்தின் அரசாங்கத்தின் எந்தவொரு திட்டமும் முறையாகவும் வெளிப்படையாகவும் குத்தகையின் அடிப்படையில் வழங்கப்படுவதை Datuk Seri Anwar Ibrahim சுட்டிக்காட்டினார். திரை மறைவுக்குப் பின்னால் எந்தவோர் அரசு திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார். எதிர்கட்சியினர் பொது வெளியில் மேடை போட்டு மக்களைக் குழப்பி வருவதாகவும் பெரும்பான்மை இருந்தால் நாடாளுமன்றத்தில் அவர்கள் நிரூபிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் என் முகத்திற்கு நேராகக் கேள்வி கேளுங்கள் நான் வெளிப்படையாகப் பதிலளிக்கிறேன் அப்படி என் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் நிரூபித்து விட்டால் நான் தாராளமாகப் பிரதமர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிறேன் என Datuk Seri Anwar Ibrahim அறிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *