மின் கட்டணம் அதிகரிக்காது! நான் பொறுப்பு! – அன்வார் நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23, 

எந்தவொரு சூழலிலும் குடியிருப்புப் பகுதிகளுக்கான TNB மின் கட்டணம் உயர்த்தப்படாது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை தெரிவித்தார். சமீபத்தில் TNB மின் கட்டணங்கள் உயர்த்தபடுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூலை மாத இறுதிக்குள் குறைந்த மின் கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார். இதனால் 85% குடியிருப்பாளர்கள் பயன்பெறுவார்கள் என தாம் கணித்துள்ளதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

முன்னதாக ஒரு சில பொறுப்பற்ற தரப்பினர் மலேசியா முழுவதும் மின் கட்டணம் உயர்வதாகப் பொய் பிரச்சாரங்களைப் பரப்பினர். ஆனால் உண்மையில் வணிகத் தலங்களுக்கு மட்டுமே மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது, அதே வேளையில் குடியிருப்புகளுக்கான மின் கட்டணங்களில் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதை பிரதமர் Datuk Seri Anwar Ibrahim சுட்டிக்காட்டினார். இந்த மாதம் உங்கள் மின் கட்டணத்தைப் பாருங்கள். நிச்சயமாக உங்களை வருத்தபடும் அளவிற்குக் கட்டணம் இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியளிக்கிறேன் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *