நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி கட்டணம் உயர்த்தப்படாது! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட நெடுஞ்சாலை சுங்கச் சாவடிக் கட்டணங்கள் மீண்டும் குறைக்கப்படும் என்றும், சுங்கச் சாவடிக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கபடாது என்றும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுக்காகச் சுங்கச் சாவடிகளின் கட்டணங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பதாகவும் இந்த சுங்கச் சாவடிகளின் கட்டணக் குறைப்பிற்கு அரசாங்கம் RM 500  மில்லியனுக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அறிவிப்பின் மூலம் CHERAS-KAJANG GRANDSAGA நெடுஞ்சாலை, கூட்டரசு வளாக L.A.T.A.R நெடுஞ்சாலை, வடக்கு கிள்ளான் N.N.K.S.B நெடுஞ்சாலை, SENAI – DESARU S.D.E நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை L.P.T.2 நெடுஞ்சாலை, தென் கிள்ளான் பள்ளத்தாக்கு S.K.V.E நெடுஞ்சாலை, SULTAN ABDUL HALIM MU’ADZAM SHAH J.S.A.H.M.S நெடுஞ்சாலை, DUKE நெடுஞ்சாலை, MEX நெடுஞ்சாலை, BUTTERWORTH நெடுஞ்சாலை என நாட்டின் முக்கிய 10 நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிக் கட்டணங்கள் நிலைநிறுத்தப்படும் என்றும் எந்தவொரு கட்டணமும் அதிகரிக்கப்படாது என்றும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *